அரச பாடசாலைகளில் இம்முறை புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படுவது தாமதிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அரச பாடசாலைகளுக்கு வழங்கப்படும் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு திட்டமிட்டபடி பாடப் புத்தகங்களை வழங்க முடியாது என அச்சகத் துறையினர் தெரிவித்தனர்
.பாடப்புத்தகங்கள் அச்சிடுவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்ற அச்சு நிறுவனங்களுக்கான கொடுப்பனவு செலுத்தாமையே இதற்கான காரணமாகும்.
இதனால் சுமார் 20 அச்சக உரிமையாளர்கள் தற்போது கடும் நெருக்கடியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
திட்டமிட்டபடி பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணியை மீண்டும் தொடங்க உரியத் தொகையைச் செலுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.