கண்டியில் உள்ள ஆண்கள் பாடசாலை ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைகள் கட்டப்பட்ட நிலையில் பாடசாலை மாணவர் ஒருவரால் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றினால் பாடசாலையின் பாதுகாப்பு கடமைகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு அதிகாரியாக இவர் நியமிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவர் தும்மோதர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவராவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்