பல தொழிற்சங்கங்கள் நாளை முதல் நாடு தழுவிய ரீதியில் போராட்டம்

2 years ago
Sri Lanka
(484 views)
aivarree.com

புகையிரத மற்றும் தபால் திணைக்கள ஊழியர்கள் இன்று (14) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக குறித்த தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இது தவிர இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாளை (15) காலை 09.00 மணிமுதல் பணிப்பகிஷ்கரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதேவேளை, அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக நாளை முதல் பாரிய அளவிலான காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பல அத்தியாவசிய சேவைகளின் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

இந்த போராட்டத்தில் துறைமுகங்கள், வைத்தியர்கள், தாதியர்கள், நீர், மின்சாரம், ஆசிரியர்கள் மற்றும் வங்கித் துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.

திட்டமிட்ட வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பான எழுத்துமூலக் கடிதமும் நேற்று அரச சேவைகள் அமைச்சிடம் கைளிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் தமது கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் நாளை நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என தொழிற்சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.