பரீட்சை எழுத சென்று கொண்டிருந்த மாணவி மீது, ஆசிட் வீச்சு

2 years ago
Sri Lanka
(388 views)
aivarree.com

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக தனது தந்தையுடன் சென்ற யுவதி மீது அசிட் வீசப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது

கேகாலை – பரகம்மன பிரதேசத்தில் வைத்து மாணவியின் காதலன் என கூறப்படும் இளைஞன் ஒருவரால் அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடுமாகம பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தனது தந்தையுடன் முச்சக்கர வண்டியில் கேகாலை நகரில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியை பின் தொடர்ந்த குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் வந்து வீதியை மறித்து முச்சக்கரவண்டியின் பின்னால் இருந்த பாடசாலை மாணவியின் கழுத்தை நெரித்து அமிலம் வீச முற்பட்டுள்ளார்.

இதன்போது மாணவியின் தந்தை அமில போத்தலை பறித்து இளைஞன் மீது வீச முற்பட்ட வேளையில், யுவதியின் தந்தை, யுவதி மற்றும் குறித்த இளைஞனும் காயமுற்று தற்போது கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .