ilankainews

பனாகொடை முகாமிலிருந்து துப்பாக்கி திருட்டு – இருவர் கைது

பனாகொடை இராணுவ முகாமிலிருந்து டி-56 ரகத் துப்பாக்கி மற்றும் 90 தோட்டாக்களைத் திருடிய குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ சார்ஜன்ட் ஒருவரும் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவார்.

கடந்த மார்ச் 3 ஆம் திகதி இடம்பெற்ற கைது சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வந்த விசாரணைக்கு அமையவே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

அந்த வகையில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் குறித்த சந்தேக நபர்கள் ஹோமாகம பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் மீதெனிய மற்றும் வெயாங்கொட பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 36 வயதுடையவர்கள் ஆவர்.

Exit mobile version