பொது நிதி தொடர்பான குழுவின் தலைவர் பதவியில் இருந்து தான் இன்று விலகவுள்ளதாக (SJB) பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ராஜினாமா கடிதத்தை விரைவில் சபாநாயகரிடம் சமர்பிப்பதாக செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
கடந்த வாரம் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை எதிர்க்கட்சிகள் பதவிக்கு பரிந்துரைத்த போதிலும் கடந்த வாரம் பொது நிதி தொடர்பான குழுவின் தலைவராக மயந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டார்.
இது பெரும் பிரச்சினையாக மாறியுள்ள நிலையில் எதிர்க்கட்சியில் அவருக்கு எதிர்ப்புகள் வந்த நிலையிலேயே அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.