பதவி விலகியதாக சொல்லப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரின் கையெழுத்து வர்த்தமானியில்

2 years ago
Sri Lanka
(445 views)
aivarree.com

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பி.எஸ்.எம். சார்லஸ், ராஜினாமா செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

அண்மையில் ஆணைக்குழுவினால் பிரசுரத்துக்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பப்பட்ட வர்த்தமானியில் அவர் கையொப்பமிட்டதன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பி.எஸ்.எம். சாள்ஸ் ஆணைக்குழுவின் கடமைகளில் இருந்து ராஜினாமா செய்ததாக கடந்த 25ஆம் திகதி செய்திகள் வெளியாகின.

அவரது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இவ்வாறானதொரு பின்னணியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றில் அவர் கையொப்பமிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது, இளைஞர் வாக்குகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றில் சார்ள்ஸ கையெழுத்திட்டதாக குறிப்பிட்டார்.