ஜக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அந்த பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் .
நாளைய தினம் வேட்புமனு தாக்கலுக்கான கால எல்லை நிறைவடையவுள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார் .
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றுக்கு தெரிவு செய்ய தனக்கு வாக்களித்த 87,000 பேருக்கும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நாடாளுமன்ற பனிக்குழுவிற்கும் நன்றி தெரிவித்தார் .
அத்துடன் அமைதியான முறையில் தேர்தலை நடத்த வழிவகுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார் .
இதேவேளை முஜிபுர் ரஹ்மான் பதவி விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஏ.எம்.எம் பௌசி அந்த பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.