ஞாயிற்றுக்கிழமை காலை மேற்கு நேபாளத்தின் பொக்காராவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர்.
“மேலும் பலரின் உடல்களை மீட்க எதிர்பார்ப்பதாக,” அந்த நாட்டின் இராணுவத்தை மெற்கோள்காட்இ ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
நேபாளத்தின் எட்டி ஏர்லைன்ஸால் இயக்கப்படும் இரட்டை எஞ்சின் ஏடிஆர் 72 விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
இதில் இரண்டு கைக்குழந்தைகள், நான்கு பணியாளர்கள் மற்றும் 10 வெளிநாட்டினர் உட்பட 72 பேர் இருந்தனர் என்று விமான செய்தித் தொடர்பாளர் சுதர்சன் பர்தாவுலா தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் வெளி நாட்டவர்கள் அடங்குகின்றனரா என்ற விபரம் தெரியவில்லை.
விமானத்தின் சிதைவுகளைச் சுற்றி மீட்புப் பணியாளர்கள் மற்றும் மக்கள் கூட்டம் கூடியுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து அடர்ந்த கரும் புகை வெளியேறுவதை உள்ளூர் தொலைக்காட்சிகள் காணொளிகளாக வெளியிட்டுள்ளன.
எவரெஸ்ட் உட்பட உலகின் மிக உயரமான 14 மலைகளில் 8 மலைகளைக் கொண்ட நேபாளத்தில் விமான விபத்துக்கள் அரிதானவை அல்ல.
அங்கு வானிலை திடீரென மாறி ஆபத்தான நிலைமைகளை உருவாக்கலாம் என கூறப்படுகிறது.