கொழும்பிலிருந்து மாணவர்களை சுற்றுலாவுக்காக அழைத்துச் சென்ற பேருந்து நானுஓய – ரதெல்ல குறுக்குவீதியில் வேன் மற்றும் முச்சக்கர வண்டியில் மோதி விபத்தை ஏற்படுபத்தியது.
இதனால் 3 சிறார்கள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்
இந்த பேருந்தினை ஓட்டிச் சென்ற 62 வயதான சாரதி கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெறும் போது பேருந்தில் பயணித்த மாணவர்களில் ஒருவர் டெய்லி நியுஸ் பத்திரிகைக்கு தெரிவித்த கருத்துக்கள்
பேருந்தின் வேகத்தை குறைக்குமாறு பல தடவைகள் சாரதியிடம் கூறினோம்
அதை அவர் பொருட்படுத்தவில்லை
பல வளைவுகள் இருந்தபோதிலும் வீதியின் சரிவில் பேருந்து செல்லும் போது வேகம் கூடியது போல் தெரிகிறது.
வளைவுகளையும் பொருட்படுத்தாமல் சாரதி கடும் வேகமாக சென்றார் .
நாங்கள் கூச்சலிட்ட போதும் அவர் அதனை பொருட்படுத்தவில்லை
பேருந்து வேன் மீது மோதியதால் பேருந்தின் பின் இருக்கையில் இருந்த மாணவர்கள் முன்னோக்கி வீசப்பட்டனர்.
பேருந்தின் முன் வரிசை ஒன்றில் நான் இருந்ததால் வேன் மற்றும் முச்சக்கர வண்டி மீது மோதியதை நான்
காணவில்லை
பின்னால் இருந்த மாணவர்கள் வேன் பல மீற்றர் தூரம் முன்னோக்கி வீசப்பட்டதைக் கண்டனர்