நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியின் சமர் செட் பகுதியில் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துள்ளாகின.
இதில் வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
ஹட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற வேன் ஒன்றுடன்,
கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மாணவர்களை சுற்றுலாவுக்கு ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றும் மோதியதிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டி ஒன்றும் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பஸ்ஸில் பயணித்த 42 மணவர்கள் காயடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பஸ் சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியின் சாரதியும் உயிரிந்ததாக பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அவசியமான உதவிகளை வழங்கவும், தேவைப்படின் விமானப்படை விமானத்தை பயன்படுத்தவும் ஜனாதிபதி பணித்துள்ளார்.