இன்றும் (30) நாளையும் (31) மின்சாரத்தை துண்டிப்பதில்லை என இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
மழை பெய்துவரும் காரணத்தினால் நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை திறப்பதற்கு நீர் முகாமைத்துவ செயலகம் தீர்மானித்துள்ளமை காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் விடுத்த கோரிக்கைக்கு அமைய மேலதிக நீர் வெளியேற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.