நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்திற்கு ஆசிரியர்களும் ஆதரவு

2 years ago
Sri Lanka
(474 views)
aivarree.com

அரசாங்கத்தின் அசாதாரண வரி அறவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது .

தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.

இதன்படிஇ அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆசிரியர்கள் அனைவரும் நாளை கருப்பு நிற ஆடைகள் மற்றும் கருப்பு பட்டிகளை அணிந்து பாடசாலைகளுக்கு வரமாறு ஜோசப் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும்இ பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.