தேர்தலுக்கான பொருத்தமான திகதி அறிவிப்பு

2 years ago
Sri Lanka
(473 views)
aivarree.com

ஒத்திவைக்கப்பட்ட 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்துவது பொருத்தமாக இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிதிப் பற்றக்குறை காரணமாக எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் கீழ் தேர்தல் நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிதி அமைச்சின் செயலாளரும், சட்டமா அதிபரும் நிறுத்தி வைப்பதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.