துருக்கி நிலநடுக்கத்தில் 200 பேர் பலி

2 years ago
Sri Lanka
(529 views)
aivarree.com

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தற்போதைய நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தெற்கு துருக்கியில் உள்ள காசிண்டெப் அருகே 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் இருந்து இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சைப்ரஸ், கிரீஸ், ஜோர்டான், லெபனான், சிரியா உள்ளிட்ட பல நாடுகள் இன்று அதிகாலையில் ஏற்பட்ட அனர்த்தத்தத்திற்கு முகம்கொடுத்தனர்.

1000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால் பலியானோர் எண்ணிக்கை 200ஆக அதிகரித்துள்ளது.

1000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

பல நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்தழிந்துள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கட்டட இடிபாடுகளுக்கு இடையில் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.