அனுராதபுரம் – மன்கடவல, அலயபத்துவ பிரதேசத்தில் வீடொன்றில் பரவிய தீயினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் பலியாகினர்.
குறித்த விபத்தில் 30 வயதான தாய் 10 வயதான மகள் மற்றும் 5 வயதான மகன் ஆகியோரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தில் படுகாயமடைந்த 37 வயதான தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு அவர்கள் உறங்கிய அறையில் தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அனர்த்தம் தொடர்பில் அலயபத்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.