யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தீயில் கருகிய நிலையில் இரண்டு பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
மனுவேற்பிள்ளை அசலின் பௌலினா, யேசுதாசன் விக்ரோரியா ஆகிய வயது முதிர்ந்த இரண்டு பெண்களே சடலங்களாக மீட்க்கப்பட்டுள்ளனர் .
சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் மறைந்த ஊடகவியலாளரும் கருத்தோவியருமான பயஸின் தாய் மற்றும் சிறிய தாயாரென தெரியவருகிறது.
இது தொடர்பிலான மேலதிக விசாரனைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .