தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இந்த வாரம்

2 years ago
Sri Lanka
(436 views)
aivarree.com

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

தற்போது பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றிருந்த நிலையில் அதற்காக 334,698 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிபபிடத்தக்கது