தம்மிக்க பிரசாத்துக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு

2 years ago
SPORTS
(463 views)
aivarree.com

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் நேபாள கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நேபாள கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படக்கூடிய ஐந்து கிரிக்கெட் வீரர்களில் இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் ஒருவராக உள்ளார்.

நேபாள கிரிக்கெட் சபையின் (CAN) தகவல்களின் படி, 40 வயதான முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அண்மையில் ஒன்லைனில் நேர்காணல் செய்யப்பட்டார்.

ஏற்கனவே அவர் அமெரிக்கா மற்றும் ஸ்கொட்லாந்துக்கு எதிரான இரண்டு தொடர்களுக்கு நேபாள அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக செயற்பட்டுள்ளார்.

அவருடன் மான்டி தேசாய் (இந்தியா), க்ளென் போக்னால் (நியூசிலாந்து), ரசல் டொமிங்கோ (தென்னாப்பிரிக்கா) மற்றும் டேவ் வாட்மோர் (ஆஸ்திரேலியா) ஆகிய நான்கு பேரின் பெயரும் இந்த பதவிக்கு பரிலீசிக்கப்படுகிறது.

இந்த ஐந்து பேரில் டேவ் வொட்மோர் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.