நுவரெலியா – கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதர்செட் தோட்டத்தின் மகன் ஒருவரால் தாக்கப்பட்டு தந்தை கொலை செய்யப்பட்ட சம்வம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த படுகொலை சம்பவத்தில் மூன்று ஆண் பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.
தந்தையை தாக்கியதாக பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்கிய அவரது மூத்த மகன் கந்தப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடுஇ அயல் வீட்டார் இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.