இலங்கையில் தட்டுப்பாடு நிலவுகின்ற 43 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் அடுத்த மாதம் கிடைக்கப்பெறும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய கடன்கள் மற்றும் உலக வங்கியின் மானியத்தின் கீழ் இலங்கைக்கு இந்த மருந்துகள் கொண்டுவரப்படவுள்ளதாக அதன் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
இந்த மருந்துகள் கிடைக்கும் வரை, மஹரகம வைத்தியசாலை உட்பட நாட்டின் புற்றுநோய் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு அதிகபட்ச முகாமைத்துவத்துடன் மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.