கடந்த சில நாட்களாகக் கடுமையாகச் சரிந்து வந்த தங்கத்தின் விலை இன்று உயர்வடைந்துள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி 22 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை இன்று 160,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. வியாழக்கிழமை அதன் விலை 134,000 ரூபாவாக பதிவாகியிருந்தது.
இதேவேளைக் கடந்த வியாழனன்று 145,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்கத்தின் விலை இன்று 173,000 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி தற்காலிகமானது எனத் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.