இந்த வருட ஜனவரி மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் இவ்வருடத்தின் கடந்த சில தினங்களில் 4,387 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் அதில் 1,426 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.
அதன்படி ஜனவரி மாதத்தில் இதுவரை கொழும்பு மாவட்டத்தில் 741 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 491 டெங்கு நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 194 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக புத்தளம், யாழ்ப்பாணம், கண்டி, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை போன்ற பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களத்ம் தெரிவித்துள்ளது .
காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சை பெறுக்கொள்வது மிக அவசியம் என்று தொற்றுநோயியல் துறை தெரிவித்துள்ளது