சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதி அமைச்சர் சென் சாவோவினால் அந்த கடிதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறையின் பிரதி அமைச்சர் சென் சாவோ உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று (14) சந்தித்தனர்.
இலங்கைக்கான சீனத் தூதரகம் டுவிட்டரில் இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்கு சீனாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவர்களிடம் தெரிவித்துள்ளார்.