சிறுத்தையை கொன்று இறைச்சியாக விற்பனை செய்த நான்கு சந்தேக நபர்கள் கைது

2 years ago
Sri Lanka
(374 views)
aivarree.com

பொகவந்தலாவ பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் சுற்றித்திரிந்த சிறுத்தையை கொன்று இறைச்சியாக விற்பனை செய்த நான்கு சந்தேக நபர்களை பொலிஸாரால் கைதாகினர் .

குறித்த சிறுத்தையைக் கொன்று அதன் இறைச்சியை விற்பனை செய்து கொண்டிருந்த வேலையில் நான்கு சந்தேக நபர்களும் கொல்லப்பட்ட சிறுத்தையின் உடலின் ஒரு பகுதியையும் பொகவந்தலாவ பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது .

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சிறுத்தையின் உடல் பாகங்கள் நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.