இலங்கையின் முதல் பெண் திரைப்பட தயாரிப்பாளரும் இலங்கையின் மூத்த திரைப்பட இயக்குனர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் மனைவியுமான சுமித்ரா பீரிஸ் இன்று காலை தனது 88வது வயதில் காலமானார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
மறைந்த சுமித்ரா பீரிஸ் 1990 களின் பிற்பகுதியில் பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.
மறைந்த சுமித்ராவின் முதல் திரைப்படமான “கெஹெனு லமாய்” வெற்றி பெற்று பல விருதுகளையும் பெற்றது.
சிங்கள சினிமாவின் வளர்ச்சிக்கான அவரது பங்களிப்பில் “கெஹேனு லமாய்”, “கங்கா அத்தாரா”, “யஹலுவோ”, “மாயா”, “சக்மான் மாலுவா” மற்றும் “வைஷ்ணவி” ஆகிய திரைப்படங்ளும் அடங்கும்.