க்யூ ஆர்.கோட் இல்லாமல் பெற்றோல் வழங்க மறுத்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது .
இந்த சம்பவம் யாழ். நாவற்குழி எரிபொருள் நிலையத்தில் நேற்றிரவு 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த ஊழியர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்