பொது நிதி தொடர்பான குழுவின் (COPE) தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை மீண்டும் நியமிக்குமாறு எதிர்க்கட்சி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நிலையியற் கட்டளையின் பிரகாரம் எதிர்க்கட்சி உறுப்பினரே தலைவர் பதவியை வகிக்க வேண்டும் என்பதால், COPE இன் முன்னாள் தலைவராக இருந்த கலாநிதி ஹர்ஷ டி சில்வா மீண்டும் அப்பதவிக்கு நியமிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதன் பிரகாரம் அவரை மீண்டும் அப்பதவிக்கு நியமிக்க முடியும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
ரவூப் ஹக்கீம், விஜித ஹேரத், பாட்டலி சம்பிக்க ரணவக்க, சந்திம வீரக்கொடி, நாலக கொடஹேவா, ஹர்ஷ டி சில்வா, எம்.ஏ.சுமந்திரன், ஹேஷா விதானகே, மயந்த திஸாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா உள்ளிட்ட பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் குழுவின் உறுப்பினர்களாக அறிவித்துள்ளார்.