ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பிரதான கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக நுகர்வோரின் கோதுமை மாவுக்கான தேவை குறைந்துள்ளதாகவும், தோட்ட மக்கள் கோதுமை மா தொடர்பான உணவுகளை உட்கொள்வதை பெருமளவு குறைத்துள்ளதாகவும் விற்பனை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாணின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதாக அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
(Aivarree)