கொவிட்-19 வைரஸ் பரவி உலகளாவிய பெருந்தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டு நேற்றுடன் (31) 3 ஆண்டுகள் நிறைவடைந்தன.
எனினும் இன்னும் கோவிட் தொற்றுநோயின் ஆபத்து இன்னும் குறையவில்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
கோவிட்-19 உலகளாவிய சுகாதார அவசரநிலை தொடர்ந்து அமுலில் இருக்கும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
இதன்படி, அதிகபட்ச சுகாதார அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பழக்க வழக்கங்களும் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், உலகளாவிய கொவிட் பெருந்தொற்று இப்போது ஒரு மாற்ற காலத்திற்குள் நுழைந்துள்ளது என்றும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரையில், உலகம் முழுவதும் 6.8 மில்லியன் மனித உயிர்கள் கொவிட் வைரஸால் காவுகொள்ளப்பட்டுள்ளனர்.
உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலிருந்தும் கொவிட் நோயாளிகள் பதிவாகி வருகின்றனர்.
இதனால் உலக பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு கணக்கிட முடியாததாகும்.
மேலும், கடந்த டிசம்பரில் இருந்து, உலகம் முழுவதும் பதிவான கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது.
அதன்படி, கடந்த 8 வாரங்களில் உலகம் முழுவதும் ஏற்பட்ட கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 170,000 என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் மேலும் தெரிவித்துள்ளார்.