அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக கொழும்பு துறைமுக ஊழியர்கள் இன்று பாரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துறைமுக நுழைவாயிலில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கொழும்பு துறைமுகத்தின் பல தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அரசாங்கம் உத்தேச வரிகளை திருத்தியமைக்காவிட்டால் நாளை முதல் கொழும்பு துறைமுகத்திற்கு கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என சங்கத்தின் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர்.