கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடும்பிராய் – பொக்கனைப் பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபரிடமிருந்து சுமார் 6 லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
38 வயதான குறித்த சந்தேக நபர் உடும்பிராய் பொக்கனைப் பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அதேநேரம் அவர் ஏற்கனவே பல தடவைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டும் உள்ளார்.
இந் நிலையில் கைதான சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தடுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவத்துள்ளனர்.