இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 30 ரூபாவிற்கு வழங்கினால், கேக் உற்பத்திகளின் விலையை குறைப்பது குறித்து பரிசீலிக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
30 ரூபா விலையில் முட்டை வழங்கப்பட்டாலும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது எனவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.