குடும்பத்தலைவர் வெட்டி படுகொலை – மனைவி , மாமனார் உள்ளிட்ட 11 பேர் கைது

2 years ago
Sri Lanka
(487 views)
aivarree.com

குடும்பத்தலைவர் ஒருவரை வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில் அவரின் மனைவி , மாமனார் (மனைவியின் தந்தை) உள்ளிட்ட 11 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருத்தல் நிலையம் ஒன்றை நடத்தி வந்த அஜித் என்பவர் கடந்த 21ஆம் திகதி வேலை முடிந்து வீடு திரும்பும் போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் அவரை வழிமறித்து தாக்கியுள்ளனர் .

அந்த நபர்களிடமிருந்து தப்பிபோடிய அவரை அவரது வீடு வரை துரத்தி சென்று வீட்டு வாசலில் வைத்து படுகொலை செய்தனர் .

இது தொடர்பில் கோப்பாய் பொலிசார் மேற்கொண்ட விசாரனையின் போது படுகொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தில் முரண்பாடுகள் நிலவி வந்ததாகவும் அதனால் அவர் குடும்பத்தை விட்டு தனித்து தனது வாகன திருத்தல் நிலையத்தில் தங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது .

படுகொலையானவரின் மனைவியும் மாமனாரும் (மனைவியின் தந்தை) இணைந்து திட்டம் தீட்டி வேறு நபர்கள் மூலம் குறித்த நபரை படுகொலை செய்துள்ளனர் என விசாரனையின் பின் தெரியவந்துள்ளது

சமபவம் தொடர்பில் மனைவி இ மனைவியின் தந்தை உள்ளிட்ட 11 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.