அவுஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவின் சகலதுறை ஆட்டக்காரர் ரவீந்திர ஜடேஜா விளையாடுவது சந்தேகமாகவே உள்ளது.
இவர் 2022 ஆகஸ்ட் 31ம் திகதி ஆசியக் கோப்பை 2022 குழு நிலை ஆட்டத்தின் போது ஹாங்காங் அணிக்கு எதிராக இந்தியாவுக்காக விளையாடினார்
அப்போது ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக ஜடேஜா அணியில் இடம்பெற்றிருக்கவில்லை.
தற்போது ஆஸிஸுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்காக இந்தியாவின் அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆனால் அவர் இன்னும் முழுமையாக காயத்திலிருந்து மீளவில்லை.
ட்விட்டரில் அவர் பகிர்ந்துள்ள காணொளி ஒன்றில் அவரது வலது முழங்காலில் ஒரு பாதுகாப்பு நாடாவை சுற்றியபடியே பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் இந்த போட்டித்தொடரில் விளையாடுவது குறித்து முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கும் போதே தீர்மானிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.