காதலர் தினத்திற்காக தயாரிக்கப்பட்டு சந்தையில் விநியோகிக்கப்படும் கஞ்சா கலந்த சாக்லேட் வகைக்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி வழங்கவில்லை என சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
இவை சொக்லேட் பொத்துஹெர பிரதேசத்தில் உள்ள ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.
இதில் கஞ்சா, அஸ்வகந்தா, அதிமதுரம் மற்றும் உப்பு கலந்துள்ளன.
இதற்கான அனுமதியை வழங்குமாறு சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர் ஆயுர்வேத திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கவில்லை எனவே கஞ்சா போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் இது தடைசெய்யப்பட்ட தயாரிப்பு என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இந்த வகை சாக்லேட்டைத் தயாரித்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டபிள்யூ.ஏ. தனஞ்சய வீரசூரிய இந்த தயாரிப்புக்கான அனுமதியை வழங்குமாறு ஆயுர்வேத திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
1,000 கஞ்சா கலந்த சாக்லேட்டுகள் தயாரிக்கப்பட்டு அவை விற்பனையாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.