கம்பளையில் தனியார் வங்கியின் ATM இயந்திம் கொள்ளை

2 years ago
Sri Lanka
(412 views)
aivarree.com

கம்பளை நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் தானியக்க பண இயந்திரம் (ATM) முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர்களால் அபகரிக்கப்பட்டுள்ளது .

நள்ளிரவு 12.40 அளவில் ATM இயந்திரத்தை கழற்றி அந்த நபர்கள் திருடிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேனில் வந்த நபர்கள் வங்கியில் இருந்த பாதுகாப்பு அதிகாரியை கட்டி வைத்துவிட்டு ஏ.டி.எம் இயந்திரத்தை திருடி சென்றுள்ளனர் .

கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வேன் பேராதனை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வேனின் சாரதி வாகனத்திற்குள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளார் .

சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை .

கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.