ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு QR முறையை இடைநிறுத்துவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் ஒதுக்கத்தை படிப்படியாக அதிகரிக்க ஆலோசிக்கப்படுவதாகவும் அவர் ட்வீட்டரில் தெரிவித்தார்.
மேலும், அடுத்த சில மாதங்களில் நிதியமைச்சகம் மற்றும் பிற தரப்புகளுடன் கலந்தாலோசித்து இந்த அமைப்பு குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.