எரிபொருள் விநியோகத்துக்காக அமுலாக்கப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையின் கீழ், இனி வாராவாரம் செவ்வாய்க்கிழமைகளில் எரிபொருள் ஒதுக்கம் புதுப்பிக்கப்படும்
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர இதனை அறிவித்துள்ளார்.
இதன்படி இன்று (8) காலை அனைத்து QR கணக்குகளுக்கும் எரிபொருள் ஒதுக்கம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எரிபொருள் ஒதுக்க அளவில் மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலிய களஞ்சியங்கள் முனையம் என்பவற்றுக்கு ஏற்படுகின்ற விநியோக செலவினங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.