எரிபொருள் ஒதுக்கத்தை அதிகரிக்க CPC மறுப்பு

2 years ago
Sri Lanka
(436 views)
aivarree.com

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்குமாறு கோரிக்கைகள் கிடைத்துள்ள போதிலும் அதற்கான அனுமதியை வழங்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு கோட்டாவை அதிகரிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது என அதன் தலைவர் மொஹமட் உவைஸ் மொஹமட் தெரிவித்தார்

தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்த கருத்துக்கள்

  • ​​எரிபொருள் கோட்டாவை அதிகரிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
  • தற்போது எமக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சினை எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு டொலர்கள் தேவைப்படுவதேயாகும்.
  • டொலர்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கையின் பணம் தேவைப்படுகின்றது.
  • எரிபொருள் கொள்வனவுக்கு எமக்கு தேவையான ரூபாய்கள் எங்களிடம் இல்லை.
  • நாங்கள் அதை மிகத் தெளிவாகக் கூறியுள்ளோம்.