எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விலை குறைவடையும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாராளுமன்றில் இன்று உரையாற்றிய அமைச்சரும், ஆளுங்கட்சியின் பிரதம கொரடாவுமான சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
(உலக சந்தையில்) எரிபொருள் விலை குறைவடைந்துள்ள நிலையில், இலங்கை அதனைக் கொள்வனவு செய்துள்ளது. எதிர்வரும் நாட்களில் அவை இலங்கை துறைமுகத்தை வந்தடையும்.
அத்துடன் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி உயர்வடைந்து வருகின்றது.
அதனால் புதிய எரிபொருள் தொகைகள் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்படும்.
எரிபொருள் விலை குறைப்பு ஏனைய பொருட்களின் விலைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.