உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் திட்டமிட்டபடி முறையாக நடத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அவர்கள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,
- நாட்டில் நிலவும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஸ்திரமின்மையை நீக்கி நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்கு ஜனாதிபதிக்குப் பாராட்டுக்கள்.
- சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்து, மக்களின் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதன் மூலம் மக்கள் மத்தியில் இயல்பு நிலையையும் அமைதியையும் மீட்டெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மக்கள் நலக் கொள்கைகளை அமல்படுத்தவும், மக்களின் உயிரைப் பாதுகாக்கவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இந்த இக்கட்டான தருணத்தில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அனைத்து தரப்புகளும் தங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டும்
- அரசியல் வேறுபாடுகள் பாராமல் மக்களின் நலனுக்கான தேசிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட நீண்டகால திட்டங்களின் அவசியத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.