உயர்தர பரீட்சை நடத்துவதில் சிக்கலா? | பரீட்சைகள் ஆணையாளர் விளக்கம்

2 years ago
Sri Lanka
(558 views)
aivarree.com

2022 க.பொ.த  (உ/த) பரீட்சைகள் திட்டமிட்டபடி எதிர்வரும் திங்கட்கிழமை (23) ஆரம்பமாகி பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு இரண்டு உயர்தர பரீட்சைகள் நடத்தப்பட உள்ளதால், தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய சம்பந்தப்பட்ட திணைக்களங்களில் சிக்கல்கள் நிலவுவதாக கூறப்படுகிறது.

அத்துடன் பரீட்சை வினாத்தாள் மற்றும் விடைத்தாளுக்கான பற்றாக்குறை காணப்பட்டதாகவும் , ஆனால் காகிதாகி தட்டுப்பாட்டினால் பரீட்சை பாதிக்கப்படாது எனவும், பரீட்சார்த்திகளுக்கு விடைகளை வழங்குவதற்கு தடையின்றி காகிதங்கள் வழங்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அத்துடன் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பணம் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.