இலங்கை வானிலையில் ஏற்படப் போகும் மாற்றம்

2 years ago
Sri Lanka
(437 views)
aivarree.com

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் வறட்சியான காலநிலையில் அடுத்த சில நாட்களில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் வரும் நாட்களில் மழையுடனான வானிலை நிலவும் சாத்தியங்கள் அதிகமுள்ளன.

நாட்டின் ஏனைய பகுதிகளில் குறிப்பாக சீரான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் ஊவா மற்றும் வட மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, காலியிலிருந்து மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் மழை பெய்யும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளும் மட்டக்களப்பிலிருந்து பொத்துவில், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஊடாக காலி வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும்.