இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி.முரளீதரன் இரண்டு நாள் விஜயமாக வெள்ளிக்கிழமை இலங்கை வருகிறார்.
அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இலங்கை வந்திருந்த குறுகியகால இடைவெளியில் முரளிதரனின் விஜயம் இடம்பெறுகிறது.
முரளீதரன் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை சந்திக்க உள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், இலங்கையின் 75வது சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி முரளீதரன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.
அவர் இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சருடன் தனித்தனியான இருதரப்பு தொடர்புகளை மேற்கொள்வார்.
அத்துடன் இந்திய வம்சாவளியினரின் பிரதிநிதிகளுடன் அவர் கலந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.