இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று மாலை இலங்கை வந்தடைந்தார்.
மாலைத்தீவுக்கு சென்றிருந்த அவர் அதிபர் முகமது சோலிஹ் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
கொழும்பில் அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன அத்துடன் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.
இதேவேளை இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியுடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கான உறுதிப்பாட்டை இந்தியா நேரடியாக வழங்கியுள்ள நிலையில் அவரது விஜயம் அமைகிறது.
அவர் இலங்கையில் இரண்டு முக்கிய உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடுவாரென எதிர்ப்பார்க்கப்படுகிறது.