இலங்கை கால்பந்து சம்மேளனம் மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேச தடையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ( FFSL) தற்போதைய தலைவர் ஜே. ஸ்ரீ ரங்கா இதனை தெரிவித்தார்.
கால்பந்தாட்ட இல்லத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்த கருத்துக்கள்
சம்மேளனத்தின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்குப் பிறகு புதிய நியமனங்கள் குறித்து விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களம் சர்வதேச கால்பந்து சம்மேளனத்துக்குத் தெரிவிக்காதது ஆச்சரியமளிக்கிறது.
இந்த தடைக்காக நான் மிகவும் வருந்துகிறேன்.
தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வாரமாகியும் இன்னும் ஃபிஃபாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழல் இல்லை.
ஏனெனில் கடந்த 16ஆம் திகதி நான் புதிய தலைவராக பதவியேற்றேன்.
ஆனால் அப்போதும் சர்வதேச கால்பந்து சம்மேளனத்திற்கு முன்னாள் தலைவர் அனுப்பிய செய்திகள் உள்ளன.
மறுபுறம் புதிய அதிகாரிகள் தொடர்பில் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நேற்று (23) பிபாவிற்கு அறிவித்துள்ளார்.
இப்போது செய்ய வேண்டியது இந்தத் தடையை நீக்குவதுதான்’