இலங்கை மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
வருமானத்திற்கு இரட்டை வரி விதிப்பதை தடுத்தல் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் வரி ஏய்ப்பு செய்வதை தடுத்தல் ஆகிய செயற்பாடுகள் தொடர்பாக இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 75 (3) பிரிவின் கீழ் இந்த உடன்படிக்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபரால் இந்த ஒப்பந்தம் உறுதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதேவேளை வெளிவிவகார அமைச்சு உரிய உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.