இலங்கை சுதந்திர தின நிகழ்வை புறக்கணிக்கும் கத்தோலிக்க திருச்சபை

2 years ago
Sri Lanka
(504 views)
aivarree.com

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட கத்தோலிக்க திருச்சபை இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு சுதந்திர விழாவிற்கு அதிகளவில் பணம் செலவழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலுக்கு மன்னிப்புக் கோருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து குறித்தும் தந்தை சிறில் காமினி கருத்து தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதியே பொறுப்பு என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.