இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று (15) நடைபெறவுள்ளது.
திருவானந்தபுரத்தில் பகலிரவு ஆட்டமாக இன்றைய போட்டியும் அமையும்.
இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வி கண்ட நிலையில், இந்தியா தொடரை 2:0 என கைப்பற்றியுள்ளது.
இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இல்லை என கூறப்படுகிறது.
இந்திய அணியில் இரண்டாவது போட்டியில் விளையாடாத ச்சஹால் அணிக்கு திரும்பினால், கடந்த போட்டியில் அரைச்சதம் அடித்த குல்திப் யாதவ் நிறுத்தப்படுவாரா? என்ற கேள்வி எழுகிறது.
போட்டி இடம்பெறும் க்ரீன்ஃபீல்ட் மைதானத்தில் இதுவரையில் ஒரு, ஒருநாள் போட்டி மட்டுமே நடந்துள்ளது.
ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது.